அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க

Go down

அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க  Empty அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க

Post by kaavalan Mon Feb 28, 2011 5:39 am

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை(Folders) மற்றவர்கள் அழிக்க முடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.
இத்தகைய கோப்புக்களை(Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும் தான் உருவாக்க முடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்க முடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்று தான் அழிக்கமுடியும்.

இதோ அதற்கான வழிமுறைகள்:

1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள். இதற்கு Start>Run>(type) "cmd".

2. பின்னர் கோப்பு(folder) சேமிக்க வேண்டிய இடத்தினை(C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் "mdaux" என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.(கோப்புக்களை உருவாக்க நீங்கள்(aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களை மட்டுமே பாவிக்க முடியும்).

3. தற்பொழுது aux என்ற கோப்பானது உங்கள் கணனியில் நீங்கள் தெரிவு செய்த இடத்தில்(directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்

அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க  Folder_002

5. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rdaux என்றவாறு தட்டச்சு செய்து அழிக்கலாம்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum