அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்பட முடியாத நெருக்கடி நிலையில்! ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் கூறுகிறது

Go down

தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்பட முடியாத நெருக்கடி நிலையில்! ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் கூறுகிறது  Empty தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்பட முடியாத நெருக்கடி நிலையில்! ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் கூறுகிறது

Post by Admin Mon Feb 28, 2011 5:18 am

தேர்தல் ஆணையாளரால் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் டிரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜே.சி.வெலி அமுன, தேர்தல் ஆணையாளரின் கரங்கள் கட்டிப் போடப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் நெருக்கடி நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அரச நிறுவனங்கள் அனைத்துமே அரசியல்மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி வெலி அமுன குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த காலத் தேர்தல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த உள்ளூராட்சித் தேர்தலும் நீதியாக நியாயமாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாதெனவும் 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமை பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்திருக்கிறார்.

தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் எந்த அறிவித்தலையும் விடுப்பதற்கு முன்னரே தேர்தல் ஆணையாளர் சில உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலைப் பிற்போட எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவாக இருக்க முடியாதெனவும் அரச தரப்பின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறானதொரு முடிவை அவர் எடுத்திருப்பதாகவுமே உணர முடிகிறது.

தேர்தல் ஆணையாளர் தமக்கிருக்கும் அதிகாரங்களை உரிய முறையில் பிரயோகிப்பதாக எந்தத் தேர்தலிலும் காண முடிவதில்லை. தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பினும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல் காணப்படுவதாக பல தடவைகளிலும் அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் நீதி, சட்டம், ஒழுங்கு பேணப்படுமா, தேர்தல் நீதியாக நடைபெறுமா என்ற சந்தேகம் தோன்றி இருப்பதாகவும் சட்டத்தரணி வெலி அமுன தெரிவித்துள்ளார்.

அரச சேவையும் பொலிஸ் மற்றும் முப்படைகளும் விரைவாக அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடக்கக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் வெலி அமுன சுட்டிக்காட்டியுள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு
» ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு
» யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர்
» கனடாவுக்குள் தாய், தந்தை வர முடியாத அவலம்: விசா எண்ணிக்கை குறைப்பு
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum