அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்

Go down

யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர் Empty யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:11 am

பிரித்தானிய பயங்கரவாதத்தை ஒழிப்போம் அமெரிக்காவின் தான்தோன்றித்தனத்தை எதிர்ப்போம் என்ற கோசங்களுடன் புலம்பெயர் தமிழர்களை எதிர்த்தும் ஜனாதிபதியை ஆதரித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
காலை 10 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான பேரணி பஸ்நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஸ்ரான்லி வீதியூடாக மீளவும் பஸ் நிலையத்தை வந்தடைந்து அங்கு நிறைவடைந்தது. இதில் சுமார் 1000 வரையான மக்கள் கலந்துகொண்டனர்.

இதற்காக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டதுடன் சிவில் உடையணிந்த படையினர் மக்களுக்கான சுலோகங்களை ஏழுதிக்கொடுத்ததுடன் மக்களோடு மக்களாகவும் நின்றிருந்தனர்.