அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்

Go down

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்  Empty ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்

Post by kaavalan Mon May 02, 2011 4:26 pm

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார். என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் தற்பொழுது அமெரிக்க அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லேடனில் உயிரிழப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது தொடர்பாக சற்று முன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சவுதியில் பிறந்த மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவராவார்.

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக இரகசியமாக நடத்தி வந்தார். இவரது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல்களை சிறப்பாக நடாத்துவார்கள்.

அமெரிக்காவே எங்கள் எதிரி அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறியிருந்தார்.

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் மோதி அழித்தார். இதனால் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக ஒசாமா அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவராவார்.

இவரை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்களான புஷ், ஒபாமா தெரிவித்திருந்தனர்.

ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பார் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த பகுதிகள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந் நிலையில் அமெரிக்க படையினர் ஒசாமாவின் வீடியோ காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பு செய்து வந்தனர். பல முறை ஒசாமா கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்திருந்தும் அதனை அல்குவைதா மறுத்திருக்கின்றது. ஆனால் இன்று இச்செய்தி வெளிவந்த பின் இதுவரை அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை ஒசாமா மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டு. ஆயித்தியமலையில் இருவர் படையினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்
» அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» 1 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி: யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்
» போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் - அமெரிக்க செனட் யோசனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum