மட்டு. ஆயித்தியமலையில் இருவர் படையினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பானைக்குளத்தைச் சேர்ந்த இருவர், இராணுவச் சீருடையில் வந்தவர்களால் விசாரணைக்கென வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தினரின் ஜீப் வண்டி ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களிலும் சுமார் 10 பேர் வரை வந்ததாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.
தமது வீட்டிலிருந்த பேரின்பராசா தவசீலன் என்ற 20 வயதுடைய இளைஞனை வாகனத்தில் வந்த தம்மை இராணுவத்தினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளதாக அவருடைய தாயார் தெரிவித்தார்.
அதேவேளை பால் வியாபராம் செய்யும் தவசீலனின் சகோதரர் திருக்கேஸ்வரன் (வயது 38) வழியில் வைத்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டள்ளார்.
இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் விடுதலைப்புலிகளால் 2004ஆம் அண்டு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு 6 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டவராவார்.
தற்போது அவர், பெக்கோ இயந்திர சாரதியாக பயிற்சிபெற்று வந்தவர் எனவும் தெரியவருகிறது.
அத்துடன்,வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ஒருவரால் மறைத்து வைக்கப்பட்ட பொருள் ஒன்று தவசீலனின் காணிக்குள் தேடப்பட்டதாகவும், பின்னர் தவசீலனை அழைத்துச் சென்றதாகவும், பின்னர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென:று பின்னர் ஏறாவூர் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்
» மட்டு. வாழைச்சேனையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு
» ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்
» யாழில் ஜனாதிபதியை ஆதரித்து ஆர்ப்பாட்டப் பேரணி! பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையினரால் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum