அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ளோர் மீள் பதிவு: இலங்கைக்கு திருப்பியழைப்பதற்கான முன்னேற்பாடு

Go down

தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ளோர் மீள் பதிவு: இலங்கைக்கு திருப்பியழைப்பதற்கான முன்னேற்பாடு Empty தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ளோர் மீள் பதிவு: இலங்கைக்கு திருப்பியழைப்பதற்கான முன்னேற்பாடு

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:15 am

இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களை மீள்பதிவு செய்யும் நடவடிக்கைகளை சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அங்குள்ள மக்களை இலங்கைக்கு திருப்பியழைத்துக் கொள்வதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் சரிந்து போயிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செல்வாக்கை சற்று நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சிந்திப்பதன் வெளிப்பாடாகவே மீள்பதிவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாகவே அண்மையில் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பிறப்பத்தாட்சிப்பத்திரம் வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

எதிர்வரும் நாட்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முகாம்களையும் உள்ளடக்கிய வகையில் அகதிகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதன் பின் அந்த மக்களை விரைவில் இலங்கைக்குத் திருப்பியழைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழ்நாட்டு அகதிகள் முகாமை மையமாக வைத்து அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் பயணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக அவர்களை திருப்பியழைத்துக் கொள்ளும் நடைமுறையை அந்நாடுகள் சிபார்சு செய்துள்ளதுடன், அதற்கான நிதியுதவிகளை வழங்கவும் முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான நிலையில் தமிழ்நாட்டு அகதிகளை திருப்பியழைத்து, சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதன் மூலம் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தற்போதைக்கு தமிழ்நாட்டில் 122 அகதி முகாம்களில் ஈழத் தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வல்வெட்டித்துறையில் இராணுவம் பொதுமக்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது
» இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்
» பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது
» இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை
» இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum