வல்வெட்டித்துறையில் இராணுவம் பொதுமக்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது
Page 1 of 1

வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வாழும் பொதுமக்களை பதிவு செய்யும் செயற்பாடொன்றை இராணுவத் தரப்பினர் நேற்றுத் திடீரென ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை மீண்டும் இராணுவப் பதிவுக்குட்படுத்துவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கொன்றைத் தொடுத்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக இராணுவப் பதிவு நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஆயினும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவிற்குப் பின் நடந்த சில சம்பவங்கள் காரணமாக வல்வெட்டித்துறை மக்கள் மீது இராணுவத்தினர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாக நேற்று அப்பகுதியில் வாழும் மக்களைப் பதிவதற்கான படிவங்கள் திடீரென விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் அவற்றை கிராம சேவையாளரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கடும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வல்வெட்டித்துறையில் வாழும் மக்களை இலக்கு வைத்தே படைத்தரப்பினர் இந்த திடீர் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்

Similar topics
» தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ளோர் மீள் பதிவு: இலங்கைக்கு திருப்பியழைப்பதற்கான முன்னேற்பாடு
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதர்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum