கிபீர் விமானங்களை பயன்படுத்த விமானப்படை தடை விதிப்பு
Page 1 of 1

இலங்கை வான் படைக்கு சொந்தமான கிபீர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கம்பஹா யக்கல பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கிபீர் ரக விமானங்களை பயன்படுத்துவதற்கு விமானப்படையினர் தடைவிதித்துள்ளனர்.
வான்படை பேச்சாளர் அன்டி விஜேசூரிய இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்டு குழு, தமது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏயார் வைஸ் மார்ஷல் கபில ஜயதிலக தலைமையிலான பிரஸ்தாப குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க இரண்டு வார காலங்கள் செல்லும் எனவும் வான்படைப் பேச்சாளர் குழுத்தளபதி; அன்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விசாரணைகள் நிறைவடையும் வரையில், கிபீர் விமானங்களை வானில் பறக்க விடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பின், அவர்களை வான்படையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இன்றைய விமானப்படையின் 60 வது வருட வைரவிழாக் கொண்டாட்டங்களின்போதும் கிபீர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» கிபீர் விமான விபத்து! விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு! ஐவர் அடங்கிய குழு விசாரணை
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
» இலங்கை விமான படைக்கு சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின
» இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்
» புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum