கிபீர் விமான விபத்து! விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு! ஐவர் அடங்கிய குழு விசாரணை
Page 1 of 1

நேற்று இடம்பெற்ற விமானப்படையின் கிபீர் விமான விபத்துக் காரணமாக கோடிக்கணக்கிலான பெரும் நஷ்டமேற்பட்டிருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படை வட்டாரங்களின் தகவல்களின் பிரகாரம் விபத்துக்குள்ளான விமானங்களின் இன்றைய பெறுமதி பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று தெரிய வருகின்றது. இலங்கைப் பெறுமதியில் பல கோடி ரூபாவாகும்.
விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலினால் பிரஸ்தாப விமானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிபீர் விமானங்களை வெளிநாடுகள் கொள்வனவு செய்வதாயின் அதற்கு அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அனுமதி பெறப்படுவது முக்கியமானதாகும்.
அந்த வகையில் இஸ்ரேலிடமிருந்து இலங்கை, ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகள் மட்டுமே தற்போதைக்கு கிபீர் விமானங்களை கொள்வனவு செய்துள்ளன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மற்றும் தலைவர்களைத் தேடித்தாக்கியழிக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்கு கிபீர் விமானங்கள் பெரும் பங்காற்றியிருந்தன.
விமான விபத்தை ஆராய ஐந்து பேர் கொண்ட குழு
கம்பஹா மாவட்டத்தில் உள்ள, யக்கல பிரதேசத்தில் இரண்டு கிபிர் வானூர்திகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக வான்படைத் தளபதியினால் 5 பேர் கொண்ட விசாரணை குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஏயா வைஸ் மார்ஷல் கபில ஜயதிலக தலைமையிலான பிரஸ்தாப குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்க இரண்டு வார காலங்கள் செல்லும் எனவும் வான்படைப் பேச்சாளர் குழுத்தளபதி; அன்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றைய அனர்த்தத்தில் பலியான வானூர்தி செலுத்துனர் லெப்டினன் மொனாத் பெரேராவின் பூதவுடல் தற்சமயம் அவிசாவளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூதவுடல் காலி கிதுலம்பிட்டியவில் உள்ள அவரின் பிறப்பிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» இலங்கை விமான படைக்கு சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின
» பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்
» புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி
» கிபீர் விமானங்களை பயன்படுத்த விமானப்படை தடை விதிப்பு
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum