அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை

Go down

புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை  Empty புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை

Post by Admin Mon Feb 28, 2011 5:19 am

இலங்கை விமானப்படை இந்தவாரம் இரு முக்கிய நிகழ்வுகளைச் சந்திக்கப் போகிறது. விமானப்படையின் புதிய தளபதியாக எயர் வைஸ் மார்சல் ஹர்ஷ அபேவிக்கிரம நாளை பதவியேற்கவுள்ளார் என்பது முதலாவது விடயம். இலங்கை விமானப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் 2 ம் திகதி கொண்டாடப்படுவது இரண்டாவது விடயம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவமும் கடற்படையும் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளைப் பெருமெடுப்பில் கொண்டாடியிருந்தன.

விமானப்படையும் அதுபோலவே பெயளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

விமானங்களின் சாகச நிகழ்வுகள், கலை நிகழ்வுகள், கண்காட்சி என்று கடந்த 60 ஆண்டுகால சாதனைகளை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவதற்கு விமானப்படை தயாராகி வருகிறது.

இந்த நிகழ்வில் இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக்கை பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் அண்மையிலேயே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண், இந்த நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வரவுள்ளார்.

அத்துடன் இந்திய விமானப்படையில் உள்ள ரஷ்யத் தயாரிப்பு அதிநவீன போர் விமானங்களான சுகோய் 30 போர் விமானங்களின் அணியொன்றையும் இந்த விழாவுக்கு அனுப்பவுள்ளது இந்தியா.

இந்தியாவின் போர் விமானங்களும், விமானப்படை பிரதித் தளபதியும் இந்த நிகழ்வில் பங்கேற்கக் கூடாதென்று தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனாலும் இந்திய விமானப்படைப் பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண் சுகோய் போர் விமானங்களின் அணியுடன் இந்த நிகழ்வில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந்தக் கட்டத்திலேயே இலங்கை விமானப்படையில் தளபதி மாற்றம் நிகழ்கிறது.

விமானப்படையின் 13ஆவது தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொசான் குணதிலக்க நாளையுடன் 55 வயதை நிறைவு செய்யும் நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

எயர் சீவ் மார்ஷல் ரொசான் குணதிலக விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அவர் கூட் டுப்படைகளின் பதில் தளபதியாகப் பணி யாற்றுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதி பதவியை விட்டு விலகிச் சென்ற பின்னர் எயர்சீவ் மார்ஷல் ரொசன் குணதி லக்க பதில் கடமையைப் பொறுப்பேற்றார்.

விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இப்போது கூட்டுப்படைகளனின் பதில் தளபதியாக இருக்கும் எயர்சீவ் மார்ஷல் ரொசான் குணதிலக்க கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு அரசாங்க உயர்மட்டத்தில் நன்மதிப்பு அதிகம் இருக்கிறது.

2006 ஜுன் மாதம் விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற இவர் புலிகளுக்கு எதிரான இறுதிப்போல் முழுமையாகப் பணியாற்றியவர். இவருடன் கூட இருந்து போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். பதவியை தக்க வைத்திருந்தார்.

இவரது காலத்தில் விமானப்படை அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்த அதேவேளை பெரும் பலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்களை நடத்தி விமானப்படைக்கு நெருக்கடி கொடுத்தன.

இது இலங்கை விமானப்படையின் வேறெந்தத் தளபதியும் சந்திக்காத நெருக்கடி.

இதுபோன்ற நெருக்கடியை இனிவரப் போகும் தளபதிகளும் சந்திப்பதற்கு வாய்ப்பில்லை.

வான் தாக்குதல் முறியடிப்பு மட்டுமன்றி புலிகளின் விமானங்களைத் துரத்தும் வான் சண்டைகளை நிகழ்த்த வேண்டிய நெருக்கடியான கட்டத்தையும் எயர் சீவ் மார்ஷல் குணதிலக்கவின் காலத்தில் விமானப்படை எதிர்கொண்டது.

இறுதிப் போரின் முடிவில் புலிகளின் விமானப்படை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால் இலங்கை விமானப்படை இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது.

2007ஆம் ஆண்டில் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகள் விமானப்படைக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர்.

இந்தத் தாக்குதலில் விமானப்படையின் கணிசமான கண்காணிப்பு ஆற்றலும், பயிற்சி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

ஆனாலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்து ஒரே வாரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை நடத்தி விமானப்படை இழந்து போன மனோபலத்தை மீளக்கட்டியெழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

எயர் சீவ் மார்ஷல் ரொசான் குணதிலக்க விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற போது சுமார் 900 அதிகாரிகளும் 19,000 படையினருமே விமானப்படையின் ஆட்பலமாக இருந்தது.

இவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது 1500 அதிகாகளையும் 35,000 படையினரையும் கொண்ட பலம்வாய்ந்த படையாக அது மாறியுள்ளது.

இவரது சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தில் விமானப்படையின் ஆட்பலம் சுமார் 16,000 பேரால் அதிகக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மடங்கிலும் சற்றே குறைவானது.

இப்போது விமானப்படை 110 விமானங்களையும் கொண்டுள்ள பலம் கொண்ட படையாக மாற்றம் பெற்றுள்ளது.

விமானப்படையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம தற்போது விமானப்படையின் தலைமை அதிகாயாக இருக்கிறார்.

இந்தப் பதவிக்கு இவர் வந்து இரண்டொரு வாரங்கள் தான் ஆகியுள்ளது.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்தப் பதவியில் இருந்தவர் எயர் வைஸ் மார்ஷல் பி.பி.பிரேமச்சந்திரா.

இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழர்.

சேவை மூப்பு அடிப்படையில் இவரே அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை.

அவர் 55 வயதை அடையும் முன்னரே கடந்த முதலாம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.

அவருக்கு இப்போது பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அடையும் முன்னர் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள சூழலில் அவர் ஓய்வுபெற்றது ஏன் என்பது மர்மமே.

இவர் ஓய்வுபெற்றதை அடுத்தே சேவை மூப்பு பட்டியலில் இரண்டாவது நிலைக்கு வந்தார் எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம.

விமானப்படையின் 13ஆவது தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம ன்னர் 5ஆவது ஜெட் ஸ்குவாட்ரனின் தளபதியாக இருந்தவர்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அவர் விமானப்படையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

குறிப்பாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் இவரது வழிநடத்தலிலேயே மேற்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போல் க்கிய பங்கு வகித்த விமானப்படை, புதிய தளபதியின் கீழ் மேலும் பலத்தைப் பெருக்கவே முனைகிறது.அண்மையில் தியத்தலாவ முகாமில் 1000 மாணவ கடற் பயிலுனர்களுக்கு விமானப்படை பயிற்சிகளை வழங்கியதில் இருந்து இது உறுதியாகிறது.


புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum