பண்டாரநாயக்கவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு! இது ஒரு சதி எனவும் குற்றச்சாட்டு
Page 1 of 1
பண்டாரநாயக்கவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு! இது ஒரு சதி எனவும் குற்றச்சாட்டு
மறைந்த முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை காலி முகத்திடலிலிருந்து அகற்றுவதையோ, வேறிடத்திற்கு மாற்றுவதையோ தான் முற்றாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொங்ஹொங் ஹோட்டல் நிறுவனம் ஒன்றினால் காலிமுகத்திடலில் உல்லாச ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் பண்டாரநாயக்கவின் சிலை அங்கிருந்து இடம் மாற்றப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கேட்டபோது, இச்சிலையை இடமாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
இச்சிலையை நிர்மாணிப்பதற்கு மேற்படி இடம் தெரிவு செய்யப்பட்டதற்கு கலை ரசனை, கட்டிட நிர்மாணக் கலை, சிற்பக் கலை விவகாரம் உட்பட பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இது பண்டாரநாயக்கவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சிந்தனையின் ஒரு பகுதி. இது ஒரு சதியாகும்' என அவர் கூறினார்.
இச்சிலையை இடமாற்றும் திட்டத்திற்கு எதிராக எகிப்து மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தான் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் கேட்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
சிலையொன்றை இடமாற்றுவதற்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தேவை என நான் கருதவில்லை. அது அவசியமானால் ஊழல், வாழ்க்கைச் செலவு உயர்வு, தவறான பொருளாதார முகாமைத்துவம், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் என்பனவற்றுக்கு எதிராகவே அது நடைபெறவேண்டும் என்றார்.
Content of Popup
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» பண்டாரநாயக்கவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு! இது ஒரு சதி எனவும் குற்றச்சாட்டு
» அரசியலமைப்பை மாற்றி ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை - சந்திரிகா
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
» வடக்கு மக்களின் வாழ்க்கையை இருளாக்க முயற்சித்த சக்திகள் தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றன : பெசில் குற்றச்சாட்டு
» சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum