அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விதி முறைகளை ஒழுங்கா படிங்க டோனி: ஐசிசி

Go down

விதி முறைகளை ஒழுங்கா படிங்க டோனி: ஐசிசி Empty விதி முறைகளை ஒழுங்கா படிங்க டோனி: ஐசிசி

Post by theepan Thu Mar 03, 2011 6:29 am

விதி முறைகளை ஒழுங்கா படிங்க டோனி: ஐசிசி Dhoni_001பெங்களூரில் நடந்த இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் இயான்பெல்லுக்கு எல்.பி.டபிள்யூ அவுட் கொடுக்க மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கெப்டன் டோனி ரிவ்யூ முறையில் மேல் முறையீடு செய்தும் அவுட் கிடைக்கவில்லை. ரீப்ளேவில் அவுட் என தெளிவாக தெரிந்தும் 4 வது நடுவர் 2.5 மீற்றர் இடைவெளியை காரணம் காட்டி அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த டோனி ஹாக் ஐ தொழில் நுட்பத்தில் பந்து ஸ்டெம்புகளை தாக்குகிறது என்றால் அப்புறம் எதற்கு அவுட் தர மறுக்கிறார்கள். ரிவ்யூ தொழில்நுட்பமும் தவறு செய்கிறது என்றார். இதற்கு ஐ.சி.சி தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.சி.சி பொது மானேஜர் டேவ் ரிச்சர்ட்சன் கூறியதாவது: ரிவ்யூ முறையில் பல்வேறு விதிகள் அடங்கியுள்ளன. பெரும்பாலான நேரங்களில் இதிலுள்ள அனைத்து விதிகள் பற்றியும் வீரர்கள் அறியாமல் உள்ளனர்.
ரிவ்யூ முறையின் மீது இந்திய அணி கெப்டன் டோனி குற்றம் சுமத்தும் முன் இதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டிருந்தால் நடுவர்கள் எடுத்த முடிவு சரி தான் என்பதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum