அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி : டோனி

Go down

காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி : டோனி Empty காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி : டோனி

Post by devid Wed Dec 29, 2010 10:45 am

சச்சின் டெண்டுல்கர் நவீன காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடுவது டான் பிராட்மேனை விட சிறப்பாக சாதனை புரியக் காரணம் என கருதுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனி தெரிவித்தார்.
பிராட்மேன், சச்சின் பேட்டிங் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தோனி அளித்த பதில்:

அவர்கள் இருவரையும் ஒப்பிட முடியாது. பிராட்மேன் விளையாடி காலம் வேறு, சச்சின் விளையாடும் காலம் வேறு. அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சின் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் திகழ்வதற்கு காரணம், அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடுபவர். அவர் இப்போது அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறிய டோனி, குவாலியர் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இரட்டைச் சதம் அடித்ததையும் நினைவு கூர்ந்தார்.

கிரிக்கெட்டின் பிதாமகர் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன் 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் மறைந்தார். 52 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவரின் சராசரி 99.94 என்பது குறிப்பிடத்தக்கது.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum