ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்
Page 1 of 1

ஜனாதிபதிக்கெதிராக லண்டல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது தமிழர்களுடன் சோ்ந்து சிங்களவர்களும் புலிக்கொடிகளை ஏந்தியவண்ணம் கலந்து கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லண்டனில் தனக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிந்து கொண்ட நிலையில் அதற்கு முகம் கொடுக்கும் துணிச்சலுடனேயே ஜனாதிபதி லண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றிலும் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 போ் மட்டில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியிலும் சிங்களம் பேசுபவர்கள் இருந்தார்கள். நான் அதனை என் கண்களாலேயே கண்டிருந்தேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது புலிகள் தான் என்று அடித்துக் கூறிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் விடயம் அவ்வாறிருக்க, அவர்களைப் புலிகள் என்று குறிப்பிடாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று வெறுமனே குறிப்பிட்டதன் மூலம் கரு ஜயசூரிய புலிகளுக்கு வக்காலத்து வாங்கி நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக கண்டனமும் தெரிவித்தார்.
அத்துடன் எதற்கும் அஞ்சாத மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு தலைவனைப் பெற்றிருப்பதற்காக நாடு பெருமைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Similar topics
» புலி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» லண்டன் மியூசியத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!
» புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum