அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்

Go down

அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள் Empty அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்

Post by Admin Thu Dec 09, 2010 1:50 am

மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் இன்று மழை, வெள்ளம்,உணவுப் பொருள் தட்டுப்பாட்டினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் தற்போது பெய்துவரும் கடும் மழையினால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்யும் தொடர் மழையினால் வடக்கு மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாததால் இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன், உணவுத் தட்டுப்பாட்டினால் அவர்கள் பசி, பட்டினியுடன் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வீடுகள் இல்லை, உணவு இல்லை, மீள்குடியேற்றப்பட்டவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் மீள்குடியேற்ற அமைச்சும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கையெடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்பில் குழுக்களை அமைத்துச் செயற்பட வேண்டும். என்றார்.அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள் Wanny_floodஅடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள் IMG_1080அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள் IMG_0998அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள் IMG_1092
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum