ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா? குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா?: கருணா
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா அல்லது பிரிட்டன் குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்ற அமைச்சு நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள முரளிதரன் மேலும் கூறியதாவது:
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டனில் எமது ஜனாதிபதிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இங்கே தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திலும் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலையிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றார்.
இவ்வாறான போராட்டங்களின் மூலம் மீளவும் புலிப் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட பிரித்தானிய குடியுரிமை பெற்ற மக்களுக்கு உரிமை காணப்படுகின்ற போதிலும் ஈழக் கொடிகளை ஏந்தி எவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இன்னொரு கேள்வியையும் பிரிட்டன் அரசிடம் கேட்க விரும்புகின்றேன். அதாவது பாகிஸ்தான் ஜனாதிபதியோ அல்லது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியோ பிரிட்டன் செல்லும்போது ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்கள் ஒசாமா பின்லேடனின் படத்துடனும் அவரின் கொடியுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நீங்கள் அனுமதிப்பீர்களா?

Similar topics
» இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை
» பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?!
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum