அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ்வின் இணையத்தள செய்திக்கு ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மறுப்பு

Go down

தமிழ்வின் இணையத்தள செய்திக்கு ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மறுப்பு  Empty தமிழ்வின் இணையத்தள செய்திக்கு ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மறுப்பு

Post by kaavalan Mon May 02, 2011 4:25 pm

01.05.2011 தமிழ்வின் இணையத்தளத்தில் என்னைப்பற்றி வெளியான செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்;.அச்அசய்தியை முற்றாக மறுப்பதுடன் இச்செய்திக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தங்களது செய்தியில் இன்று நான் சிததாண்டி சென்றதாகவும் மக்களைத் தூண்டிவிட்டு செயற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. முதலில் நான் இன்று சித்தாண்டிப் பிரதேசத்திற்கே செல்லவில்லை. அதுவே குறித்த செய்தி அனைத்துமே பொய் என்பதற்கு தகுந்த சான்றாகும்.

மாறாக நேற்று மாவடிவேம்பில் நடைபெற்ற தருஸ்மன் அறிக்கைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி அமைப்பாளர் சந்திரபால. இது தொடர்பான செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்தன.

அதைவிடுத்து செய்தி சேகரிக்கச்சென்ற என்மீது களங்கம் கற்பிக்கமுனைவது குறித்து மிகுந்த வேதனையடைகின்றேன். எனது பணி யார் செய்தாலும் எது நடந்தாலும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதே தவிர எந்த சமுகத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதோ நிகழ்ச்சிகளை நடாத்துவதோ அல்ல.

கடந்த 25 ஆண்டு காலமாக மட்டக்களப்பு மண்ணிலிருந்து மிகத்துணிச்சலுடன் ஊடகப்பணி செய்யும் என்னைப்போன்ற ஒரு நடுநிலை ஊடகவியலாளனை நான் பெரிதும் நேசிக்கின்ற தமிழ் சமுகத்தின் எதிரியாக தங்களது செய்தியினூடாக காட்ட முனைந்ததுதான் எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த காலங்களில் இந்த மண்ணிலிருந்து தமிழ் ஊடகவியலாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு ஓடித்தப்பியபோது இந்த மண்ணில் நடந்த அவலங்களையெல்லாம் ஊடகரீதியாக மிகத்துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த என்னைப்போன்ற பக்கச்சார்பில்லாத ஊடகவியலாளர்மீது சேறுபூசமுனையும் தங்களின் குறித்த செய்தியை எழுதிய செய்தியாளர்மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

சமாதானத்திற்கான தேசிய சாகித்திய மண்டல விருது பெற்ற கவிஞரான என்னை குழப்பவாதியாகவும் சமாதானத்தின் விரோதியாகவும் சித்தரிக்கமுனையும் தங்களது தளச்செய்தியை மிகவன்மையாககக் கண்டிக்கிறேன்.

முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
» அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு பரவாமலிருக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தள பாவனையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கரிசனை
» இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு
» :love: பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு:love:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum