சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
Page 1 of 1
சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கடந்த ஜனவரி மாதம் மர்மான முறையில் மரணமானார்.
இது கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும், பின்னர் அது தற்கொலை என விசாரணையில் ஈடுபட்ட காவற்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
சவூதியின் வடபிராந்திய நகரான அராரில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.
எனினும் தமது வீட்டில் வைத்து அவர் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என அவருக்கு தொழில் வழங்கியவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கான மாதாந்த கொடுப்பனவும் உரிய முறையில் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவருக்கு வழங்கப்படக்கூடிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தற்கொலை செய்துக் கொண்டவரின் சடலத்தை எதிர்வரும் வாரம் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களில் இதே பிராந்தியத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ் பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
» திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum