அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்! மிரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! பதவியும் இடைநிறுத்தம் - பின்னணியில் ஈ.பி.டி.பி.

Go down

உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்! மிரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! பதவியும் இடைநிறுத்தம் - பின்னணியில் ஈ.பி.டி.பி.  Empty உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்! மிரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! பதவியும் இடைநிறுத்தம் - பின்னணியில் ஈ.பி.டி.பி.

Post by Admin Thu Mar 17, 2011 2:08 pm

உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு நேற்று சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கட்டடத்தைக் கொளுத்தப் போவதாக ஊழியர்களை மிரட்டினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.
பணியில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டார். அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த செட்டி என்று அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்கிற பொலிஸ் கொன்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி தெரியவருவதாவது:

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உதயன் அலுவலகத்துக்கு சென்ற பிரதீபன், கையில் ஒரு "லைற்றரை" வைத்துக் கொண்டு அலுவலகத்தைக் கொளுத்தப்போகிறேன் என்று ஊழியர்களை மிரட்டினார்.

கடந்த 5ஆம் திகதிய உதயனில் வெளியான "பார்த்தீர்களா கேட்டீர்களா" என்ற பத்தியில், மாணவர் ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்த கைச்சங்கிலியை பாடசாலை அதிபர் திருப்பிக்கொடுக்காது இழுத்தடித்து வந்தமை குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்துப் பேசுவதற்காகத்தான் வந்துள்ளேன் என்று தெரிவித்த பிரதீபன், பின்னர் உரத்த குரலில் ஊழியர்களைத் கண்டபாட்டுக்குத் திட்டியதுடன், கையில் வைத்திருந்த "லைட்டரை" திரும்பத் திரும்பக் கொளுத்திக் காட்டி அனைத்தையும் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனை அடுத்து, அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை விளம்பரப் பிரிவில் இருந்து அப்புறப்படுத்தி, அவர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்தனர். அப்போது அவர், தான் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதனையும் அவர் காட்டவில்லை.

அதனை அடுத்து பொலிஸாரின் விசாரணை தீவிரமானது, உடனடியாக ஈ.பி.டி.பி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படும் பாரத் தோழர் என்பவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதீபன், தான் உதயனில் சிக்கிக் கொண்டுள்ள விடயத்தைத் தெரிவித்தார்.

அங்கிருந்து உருப்படியான பதில் எதுவும் வராததை அடுத்து, மற்றொரு தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தனது நிலை குறித்துத் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் பேசுகிறார் அவருடன் பேசுங்கள் என்று கூறி கடமையில் இருந்த பொலிஸாரிடம் தொலைபேசியை நீட்டினார். அவர்கள் அதனை வாங்கிப் பேச மறுத்துவிட்டனர்.

அதற்கிடையில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து உடனடியாக வாகனத்தில் சென்ற பொலிஸார் பிரதீபனைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வாவின் உத்தரவின் பேரில் பிரதீபன் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.

பொலிஸ் பணிக்கு 500 தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்ட சமயமே பிரதீபனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பயிற்சியை முடித்த அவருக்கு நாச்சிக்குடாவில் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக அவர் கடமைக்குச் செல்லாமல் அச்சுவேலியிலேயே சுற்றிக் கொண்டிருந்தார் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

இவர், ஈ.பி.டி.பி அமைப்பின் தீவிர ஆதரவாளர் என்றும் அச்சுவேலி ஈ.பி.டி.பி முகாமில் இவரை அடிக்கடி காண முடியும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகப் பாதுகாப்பாளர் என்றும் சொல்லித்திரிந்தார் என்றும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகைக்கு தீங்கு விளைவிப்பதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் ஸ்தாபகருமான ஈ.சரவணபவன் மீது தாக்குதல் நடத்துவதா பிரதீபனின் உண்மையான நோக்கம் என்பது தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
» பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி
» ரிஷானா நபீக்கின் தண்டனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
» இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?
» யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum