அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி

Go down

பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி  Empty பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி

Post by Admin Mon Feb 28, 2011 5:23 am

பொலிஸ் மா அதிபரின் மனைவி ஆஷா பாலசூரியவின் பாதுகாவல் வாகனம் மோதுண்டதால் மோட்டார் சைக்களிலில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மனைவி ஆஷா பாலசூரிய இன்று கதிர்காமம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இன்று மாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இரத்தினபுரியின் பெல்மதுளை சன்னஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அவருக்குப் பாதுகாப்பாக வந்த வாகனத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் கடையொன்றை இடித்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த மூவருக்கும் காயமேற்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரில் மோதுண்டு அவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார். இரண்டு பொலிசாரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

ஆயினும் அதிகாரத்தை மீறிய வகையில் பொலிஸ் மா அதிபரின் மனைவி பல பாதுகாப்பு வாகனங்கள் சகிதம் பயணித்த வேளையில் விபத்து இடம்பெற்றிருப்பதால் சம்பவத்தை மூடி மறைத்து திசை திருப்ப பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து
» புசல்லாவையில் பஸ் விபத்து ஒருவர் பலி
» நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum