அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர்

Go down

யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர் Empty யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர்

Post by theepan Mon Feb 21, 2011 6:15 pm

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 19 உள்ளூராட்சிச்சபைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 60 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் அறிவித்தபடி மார்ச் 17ஆம் திகதி இடம்பெற மாட்டா எனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இதன் அடிப்படையில் 60 உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தேர்தல்கள் நடை பெறமாட்டா. இதேவேளை, மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் மஹரகம, கெஸ்பேவ, கடுவலை உள்ளூராட்சிச் சபைகள், ஹோமாகம உள்ளூராட்சிச்சபை, கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கம்பஹா, மினுவாங்கொட உள்ளூராட்சிச்சபைகள் மற்றும் அத்தனகல்லை, களுத்துறை அகலவத்தை பிரதேச சபைத்தேர்தல்களும் உள்ளடங்குகின்றன.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உள்ளூராட்சிச்சபைகள், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த 2 உள்ளூராட்சிச்சபைகள் மற்றும் நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த லிந்துலை தலவாக்கலை நகர சபைத் தேர்தல்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல்கள் தொடர்பாக மேலும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் விபரம் தருகையில்,
காலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்கள், மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசசபையுடன் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 16 சபைகளுக்கான தேர்தலும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த முறையே 6 உள்ளூராட்சிச் சபைகளுக்கும், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, அநுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 6 உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெறாது.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 உள்ளூராட்சிச் சபைகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 உள்ளூராட்சிச் சபைகளுக்கும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறாது என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ரிஷானா நபீக்கின் தண்டனை தற்காலிகமாக இடைநிறுத்தம்
» தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாக செயற்பட முடியாத நெருக்கடி நிலையில்! ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நெஷனல் கூறுகிறது
» உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்
» உதயன் அலுவலகத்தையே எரிப்பேன்! மிரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! பதவியும் இடைநிறுத்தம் - பின்னணியில் ஈ.பி.டி.பி.
» உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு குறைந்து வருகின்றது: புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum