அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்

Go down

கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் Empty கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்

Post by rajeshwary Sat Feb 19, 2011 10:15 am

கிளிநொச்சியில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களின் எண்ணிக்கை போதாததினால் அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இராணுவ அதிகாரியொருவரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.இதனால் சினமடைந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிரமதானப் பணியையும் புறக்கணித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்று முன்தினம் ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிரமதானப் பணிகளுக்கு ஆட்களைக் கூட்டி வருமாறு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரிடம் இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதற்கமைய அன்று காலை 8 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து காலை 8.30 மணிவரை மக்கள் அங்கு வந்து கொண்டேயிருந்தனர். எனினும் ஆட்கள் போதாதெனக் கூறிய இராணுவ அதிகாரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் முன்னிலையில் நடு வீதியில் வைத்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் சினமடைந்த கிராம மக்கள் இராணுவ அதிகாரியுடன் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் சிரமதானம் செய்யவும் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து அந்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரை தேடிச் சென்ற இராணுவத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் தாம் மன்னிப்புக் கேட்பதாகவும் பொதுமக்களை சிரமதானப் பணியில் ஈடுபடுமாறு கூறுமாறும் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரிடம் கேட்டுள்ளனர்.

எனினும், அதற்கிணங்காத கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொதுமக்களை சிரமதானப் பணியில் ஈடுபடுமாறு கூறி விட்டு, நேராக பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்.
பொலிஸார் அவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் கொண்டு சென்று சிகிச்சைகளுக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு
» கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்
» கொழும்பில் இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு: தமிழ் இளைஞர்கள் இருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum