யாழ். மாநகர சபையின் கோடிக்கணக்கான பணம் தனியாருக்கு தாரை வார்ப்பு! அதிகார துஷ்பிரயோகம்
Page 1 of 1

யாழ். மாநகர சபைக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல கோடிக்கணக்கான ரூபா பணம், சபையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளும் தரப்பின் அதிகாரத் துஷ்பிரயோகத்தால் தனியார் வர்த்தகர் ஒருவருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
நகரின் மையப் பகுதியில் 5 மாடிகளைக் கொண்ட கடைத்தொகுதி ஒன்றை மாநகர சபை அமைக்கிறது. இதனை அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைத் தொகுதியில் 75 க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட உள்ளன. கட்டடத்தை அமைப்பதற்கான பணம் மாநகர சபையால் வழங்கப்படவில்லை. பதிலாக கட்டடத்தை அமைப்பவரே கடைகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கட்டடத்தை அமைக்கும் நிறுவனம் அந்தக் கடைகளை தற்போதே விற்க ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருக்கும் இடைத்தரகர் ஒருவர் மூலம் விற்பனை நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு கடையும் ரூபா 2 கோடி வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்று நம்பகமாகத் தெரிய வருகின்றது.
கடைகளை விற்பதன் மூலம் கிடைக்கப் போகும் மிகப்பெரிய தொகையில் சில கோடிகள் கட்டடத்தை அமைக்கச் செலவாவது போக மீதி அனைத்தும் அந்த நிறுவனத்துக்கே சென்று சேரப்போகின்றது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான கேள்வி கோரல் உள்ளூர் பத்திரிகைகள் எதிலும் வெளியிடப்படவில்லை.
கொழும்பில் அரச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து ஒரேயொரு நிறுவனமே விண்ணப்பித்துள்ளது. அந்த நிறுவனத்துடன் உடனடியாகவே சபை ஒப்பந்தம் செய்துள்ளது.
உள்ளூராட்சி சபை விதிகளின்படி எந்த ஒரு கேள்வி கோரலுக்கும் ஒரேயொரு விண்ணப்பம் கிடைத்தால், மீள் கேள்வி கோரப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் அந்த விதி முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல்
» பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum