குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
Page 1 of 1

சிவனொளிபாத மலைக்கு செல்வதற்காக புறக்கோட்டைக்கு வந்திருந்த பாணந்துறையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை குடிக்கக் கொடுத்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் அடங்கலாக பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.
மயக்க மருந்து கலக்கப்பட்ட பானத்தை அருந்தி இரண்டு இளைஞர்களும் புறக்கோட்டை வீதியொன்றில் வீழ்ந்து கிடந்த போது பொலிஸ் அதிகாரிகளினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் இருவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த இளைஞர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பதினொராயிரம் ரூபா பணமும் அடையாள அட்டைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
புறக்கோட்டைப் பகுதியில் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்தப் பகுதிகளுக்கு வருவோர் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அவை தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் அவசர சேவை தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்
» இறந்த உடலிலிருந்த நகைகள் பிணவறை அதிகாரியினால் சூறை! போகவந்தலாவையில் சம்பவம்
» அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
» கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை
» பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum