அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Go down

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்  Empty பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்! - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Post by kaavalan Sun Feb 20, 2011 10:15 pm

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியாவுக்கும், ஜேர்மனிக்கும் இடையில் மிகக் கடுமையான சமர் நடந்து கொண்டிருந்த வேளையில், பிரிட்டனில் பணவீக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பிரித்தானியாவை பலவீனம் அடையச் செய்வதற்காக, ஜேர்மனியின் கிட்லர், பெருந்தொகையான பிரித்தானிய நாணயங்களை (கள்ள நோட்டு) அச்சடித்தார்.
இவற்றை ஜேர்மனிய விமானங்கள் பிரித்தானியாவில் பறக்க விட்டன. ஆனால் கிட்லரின் நயவஞ்சகத்தை அறிந்த பிரித்தானிய மக்கள், இந்த சதிக்கு துணைபோகவில்லை. பிரித்தானிய மக்களின் தேசப்பற்று காரணமாக அந்த கள்ள நோட்டுக்களை அலட்சியம் செய்தனர்.

1960ம் ஆண்டுப் பகுதியிலே சில ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் அரசாங்கம் மீது வெறுப்புக் கொண்ட சில தொழிற் சங்கங்கள், தமக்கு விருப்பம் இல்லாத அரசை கவிழ்ப்பதற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள்.

அப்பொழுது அச்சர்ச்சைக்குரிய அரசாங்கங்களின் கணிப்புப்படி, அவ் வேலை நிறுத்தங்கள், ஆகக் கூடியது ஒரு மாதம் கூட நீடிக்க முடியாதெனவும், தொழிலாளர் குடும்பங்கள் பசி பட்டினி நிலைக்கு வரும்பொழுது தொழிலர்கள் வேலைக்கு திரும்புவார்கள் எனக் கணித்தனர்.

ஆனால் அவ் வேலை நிறுத்தங்களோ மாதக் கணக்கில் தொடர்ந்த பொழுது, உலகம் உண்மையை உணர்ந்தது. அத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் அமெரிக்காவின் சி. ஜ. ஏ. யின் மறைவான ஆதரவுடன் நடைபெற்ற காரணத்தினால் சிஜஏ நிறுவனம் வேறு நாடுகளில் உள்ள தொழிற் சங்கங்கள் மூலம், நட்பு ரீதியான உதவியாக, வேலைநிறுத்தத்திலிருந்த நாடுகளில் உள்ள தொழிற் சங்கங்களுக்கு, உணவு மருந்து போன்றவற்றை நட்பு ரீதியாக அனுப்பிய காரணத்தினாலேயே வேலைநிறுத்தங்கள் பல மாதங்கள் நீடித்தன.

ஆகையால் பணம், பொருளாதார அழுத்தங்கள் மூலம், பணம் படைத்தவர்கள் வெற்றி மீது வெற்றி பெறலாம் என்பது தவிர்க்க முடியாத விடயம்.

இன்று உலகத் தமிழர்களுள், ஈழத் தமிழர்களுக்கு மிஞ்சி இருப்பது மானம், மரியாதை, பண்பு, நேர்மை, விடாமுயற்சி போன்றவையே. தமிழீழ விடுதலைப் போராட்டம், விசேடமாக ஆயுதப் போராட்டம் நாட்டில் மௌனித்துவிட்டது.

தற்காலிகமாக படிப்படியாக முன்னேறிவந்த தமிழீழ அரசு ஒட்டு மொத்தமாக பறிபோயுள்ளது. போராடிய மக்களும், போராளிகளும் சிறையிலும், முகாங்களிலும் அடைக்கப்பட்டு விட்டனர். மிஞ்சியது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே.

புலம்பெயர் வாழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதிப்புக்களினால், இன்று ஏறக்குறைய ஆறு இலட்சம் தமிழீழ மக்கள் மேற்கு நாடுகளிலும், இந்தியா, தென் ஆபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் பலர் தாம் வாழும் நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பெரும் வியாபாரங்களைக் கொண்ட நிறுவனத்தினராகவும், சிலர் தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள் போன்றவற்றை நடத்தி ஈழத் தமிழர்கள் ஒரு கௌரவ விருந்தினர்களாகவும், மதிப்புள்ள பிரஜைகளாகவும் வாழ்கின்றனர்.

ஆகையால் இவ்வேளையில் தமது உடன்பிறவா சகோதர சகோதரிகள் பற்றியும், தாம் வாழ்ந்த நிலம் பற்றியும், சிந்திப்பதும் அதற்கான எதிர்காலத்திற்கு வித்திடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது.

ஆனால் புலம்பெயர்வாழ் மக்களுடைய இந்தச் சுபீட்சமான சிந்தனையை, சிறீலங்கா அரசு மட்டுமல்லாது தமது சுகபோக வாழ்வுக்காக சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாக செயற்படுவோரும், சிறீலங்கா அரசுக்கு துணைபோகும் அரசுகளும் விரும்பவில்லை. இதனால் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடையே தொல்லைகள், பிரச்சினைகளை நன்கு திட்டமிட்டு கட்டவிழ்த்திட்டுள்ளனர்.

கூலிக்கு மார்பு அடிப்பதா?

ஓர் இனத்தை பலவீனமடைய செய்வதோ ஒற்றுமையில்லாது வாழச் செய்வதோ, தினமும் சர்ச்சைகளுடன் வாழச் செய்வதோ, அது யாராக இருந்தாலும் சுலபமான வேலைத்திட்டம் அல்ல.

அரசியல் பழிவாங்கள், நிர்மூலம் ஆக்கப்படுதல், பிளவுபடச் செய்தல் போன்ற காரியங்கள் நீண்டகால திட்டத்துடன பாரிய நிதியைச் செலவிடுவதன் மூலமே சாதிக்க முடியுமென்பதை சரித்திர ரீதியாக யாவரும் அறிந்துள்ளோம்.

இத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு அவ் இனத்திற்குள் சில கோடாரிக் காம்புகள் இருந்தாக வேண்டும். இக் கோடாரிக் காம்புகள் தமது இனம், நிலம், கலாச்சாரம், சரித்திரத்தில் சுயநலம் கொண்டவர்களாகவும், பண ஆசை கொண்டவர்களாக இருப்பதுடன், நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நாம் படிக்கும் பாடங்கள்.

துரதிஸ்டவசமாக தமிழீழ மக்களுடைய விடுதலைப் போராட்டம் இப்படியான நடிகர்களுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஓர் அரசு தனது நீண்டகாலத் திட்டத்துடன் சிலரை நல்ல பயிற்சியளித்து வேறுபட்ட நாடுகளுக்கு பல வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைத்துள்ளது என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது.

இதில் சிலர் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் நாளாந்த உலகச் செய்திகளைத் திரட்டி இணையத்தளங்கள் நடத்துகிறார்கள். அவ் இணையத்தளங்களில் ஆக்கங்களுக்கு மேலாக நிழற்படங்களும், காணொளிக் காட்சிகளுமே பிரசுரிக்கப்படுகின்றன.

வேறு சிலர் தமது ஒலி, ஒளி நாடா மூலம் தமது கற்பனைக் கதைகளையும், பிறருக்கு சிக்கல்களை கொண்டுவரக்கூடிய ஆக்கங்களை பிரசுரித்தனர், தொடர்ந்தும் பிரசுரிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

வேறு சிலர் தமது கைகளில் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு விடயம் விளங்கிய அனுபசாலிகளை விரட்டியும், விடயம் விளங்காத தமது விசுவாசிகளுக்கு முன்னுரிமையும், முதலிடமும் கொடுத்ததுடன், தமக்கு விசுவாசம் அற்ற நண்பர்களுக்கு இடையேயும், குடும்பங்களுக்கிடையேயும் மோதல்களை உருவாக்குகின்றனர்.

மிகச் சுருக்கமாக கூறுவதானால் தமது எஜமானர்களைத் திருப்திப்படுத்துவற்காக - படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதற்கு நல்ல ஊதியம் சன்மானம் பெற்றனர், பெற்று வருகின்றனர்.

இறுதி வெற்றி

தமது இனம், நிலம், கலாச்சாரம், சரித்திரத்தை உள்ள நாட்டில் நிர்மூலம் ஆக்க உதவிய இந்தக் கூட்டம், தற்பொழுது புலம்பெயர்வாழ் தமிழர்களை சவப்பெட்டிக்குள் மூடுவதற்காக உழைக்கிறார்கள். கற்பனைச் செய்திகள், பயமுறுத்தும் செய்திகள், அநோமதேய தொலைபேசிகள், கொலைமிரட்டல்கள் போன்ற கீழ்தரமான வேலைகளைச் செய்து வயிறு வளர்க்கிறார்கள்.

அத்துடன் தமது அடவடித்தனங்களை வெளிப்படுத்தும், ஊடகங்கள் மீதும், ஊடகர்கள் மீதும் தமது நாசகார கைவரிசைகளை காட்டுகின்றனர்.

இவர்களது போலி உட்பிரவேசம், வேறுபட்ட நாடுகளில் சகலருடனான தொடர்புகள், பொய்யை கூறி எட்டாத கொப்பெல்லாம் தொட்டவர்கள், தொட முனைந்தவர்கள் இன்று தமது இறுதி வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

இவர்கள் மகிந்தவுடனும், கோத்தபாயாவுடனும் கை குலுக்குவதையும், இராணுவ வண்டிகளில் சவாரி செய்வதையும் தமது செயல்திறன் எனக் கணித்து செயல்படுகின்றனர். சமூகம் இவர்களை இனங்காணும்வரை தொடரட்டும் இவர்கள் பணி.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி
» நோயாளிப் பிள்ளைக்கு பணம் சேகரித்த நபர் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட்டம்
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
» வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
» கடந்த ஒரு வருட காலத்துக்குள் கப்பம் கோரியவர்கள் 60 போ் கைது! பதினைந்து கோடி பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum