அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ

Go down

வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ  Empty வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:53 pm

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லுறவுகள் அமைச்சருமான வாசுதேவ நாயணக்கார கோரியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்மைப்பை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக அரசாங்கம் ஏற்றுக் கொண்டு நிலையான அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

ஏனெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு இரண்டாம் இடத்தில் அவர்களே உள்ளனர். தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளமை இத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் அவசரமாக ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.

அதற்கு முன்பதாக பாதுகாப்பு வலயங்கள், உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்படவேண்டும். இடம்பெயர்ந்த மக்களை அடிப்படை வசதிகளுடன் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதேவேளை தமிழ் மக்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழ்நிலை உறுதிப்படுத்தப்படவேண்டும். இவையே அவசரமாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களாகும்.

எனவே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அடிப்படைவாதக் கொள்கைகள் கொண்ட கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இவற்றால் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை தடுத்துவிட முடியாது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum