அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்

Go down

வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம் Empty வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்

Post by priyanka Sun Dec 19, 2010 2:25 am

வடக்கு மக்கள் இடம்பெயர்ந்தார்கள், கல்வியறிவு அறிவு இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் சென்றார்கள், கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்தார்கள், கல்வியறிவு இல்லாததன் காரணமாக இன்னும் அகதி முகாமிலேயே வாழ்வதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைவிலகிய மாணவர்களை மீண்டும் கல்வியில் இணைப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை யுனிசெப் ஏற்பாட்டில் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

யுத்தம் நிறைவு பெற்று விட்டது. இருப்பினும் நாம் இப்பொது எதிர்கொண்டுள்ள யுத்தம் அறிவு யுத்தமாகும். அதற்கான சோல்ட்ஜர்கள் (படைவீரர்கள்.) நம்மிடமுள்ள மாணவர்களாகும்.

வடக்கு மக்கள் இடம்பெயர்ந்தார்கள் கல்வியறிவு அறிவு இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் சென்றார்கள்,கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்தார்கள் கல்வியறிவு இல்லாததன் காரணமாக இன்னும் அகதிமுகாமிலேயே வாழ்கின்றனர்.

வடக்கு மக்கள் எல்லாம் தமது அறிவின் காரணமாக உலகம் முழுவதும் சென்று இன்று இலங்கையை விலைநிர்ணயம்செய்கின்றவர்களாக மாறியுள்ளனர்.

அதுமட்டுமல்ல யுத்தம் நடந்தகாலத்தில் உரிமைகள் பேசப்பட்டதைவிட யுத்தம் இல்லாதபோது இப்போது அதிகமாக பேசப்படுகின்றது.அதற்கும் காரணம் இந்த அறிவுசார்ந்தோர் உலகம் முழுவதும் சென்று அந்த அறிவு யுத்தத்தை தொடங்கியதுதான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே அது இன்னும் எமக்கு தேவைப்படுகின்றது.இன்னும்இன்னும் பல ஆண்டுகளுக்கு தேவைப்படுகின்றது.அதனை புரிந்து மிகவும் அறிவுரீதியாக யுத்தம்செய்கின்ற மிகவும் சிறந்த வீரர்களாக எங்களது ஒவ்வொரு பிள்ளைகளையும் மாற்றிக்காட்ட உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள் என உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்களை கண்டிப்பது முற்றுமுழுதாக தடை செய்யப்பட:டள்ளதாக எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறானதாகும். ஆழுமை ரீதியான முறையில் பிள்ளைகளைக் கண்டிக்காமல் ஒரு மாணவன் சிறந்த நிலைக்கு வரமுடியாது.

தண்டித்தல் தொடர்பான சட்டத்தை இயற்றியவர்களும் தங்களுடைய ஆசிரியர்களிடம் அடிவாங்கியே இருப்பார்கள்.

புரிந்துணர்வின்மை காரணமாக ஏற்படுகின்ற சிக்கல்களால் சில ஆசிரியர்கள் மனக்குழப்பத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள்.

மேல்நிலையில் இருக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒருதிருப்பு முனையிருக்கும். தண்டிக்கப்படாத யாரும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

மாணவர்களுக்குத் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனமாக இருக்கக் கூடாது. தமது பிள்ளைகள் 13 ம் ஆண்டுவரை கல்வி கற்று முடித்திருந்தாலும், சில பெற்றோர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்களை தெரியாது. புரிந்துணர்வுகள் வளர்க்கப்படும் போது பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

இச் செயலமர்வில், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம் DSC08125
வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம் DSC08126வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம் DSC08127
வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம் DSC08128
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
» புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி
» வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _
» வடக்கு மக்களின் வாழ்க்கையை இருளாக்க முயற்சித்த சக்திகள் தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றன : பெசில் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum