வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
Page 1 of 1

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம் என்றும் தமிழ் மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் மேதின உரையில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர் சங்கத்தின் மேதினக் கூட்டம் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
தொழிலாளர்களுக்கான தினமாக மேதினம் கொண்டாடப்பட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான குரல் கொடுப்பதற்கான பல்வேறு அரசியல் கட்சிகள் தமது கட்சிகளின் கொள்கையை முன் வைக்கும் நாளாகவும் தொழில் சங்கங்கள் தமது ஒற்றுமையைக் கட்டியெழுப்பி அவர்களின் உரிமைகளை உலகறியச் செய்யும் நாளாகவும் கடைப்பிடிப்பதை காணலாம் அந்த வகையில்தான் வடக்கு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர் சங்கமும் மட்டக்களப்பில் இந்த பெருவிழாவை எடுத்திருக்கிறது.
வடக்கு கிழக்கு மாகாணமென்பது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் இதில் எந்தவொரு மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. இலங்கை சுதந்திரமடைந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 மார்ச் 21 ம் திகதி வரை வடக்கு கிழக்கிலே இடம்பெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் எந்தவொரு சிங்கள மகனும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வரலாறு இல்லை.
1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில்தான் முதன்முதலாக அம்பாறை தொகுதியில் இருந்து ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் (திரு.விஜேயசிங்க) தெரிவு செய்யப்பட்டார். அப்போதுகூட அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பிலுடன்தான் இருந்தது 1961 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் திகதிதான் அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பில் இருந்து பிரிந்துசென்று தனியான மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதற்குப் பிற்பாடு 1977 ல் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தொகுதி ஆரம்பிக்ப்பட்டபோது அங்கிருந்து வடக்கு கிழக்கின் இரண்டாவது சிங்கள மகன் பாராளுமன்ற உறுப்பினராக (ஏ.சு.லீலாரெட்ண) தெரிவானார். ஏன் நான் இந்த வரலாறுகளைச் சொல்லுகின்றேன் என்றால் வடக்கு கிழக்கென்பது தமிழர்களின் பூர்வீக தாயகமாக இருந்ததன் காரணமாக அதற்குப் பிற்பாடு திட்டமிட்ட குடியேற்றத்தின் விளைவாக எமது நிலம், எமது மண், எமது மொழி, எமது கலாச்சாரம், எமது அரசியல் என்பது இவ்வாறு சூறையாடப்பட்டதற்கு இது ஒரு சான்றே போதுமென நான் நினைக்கின்றேன்.
எந்தவொரு மனிதனும் தனது இனத்தை தனது குலத்தை தமது மதத்தை தெரிவு செய்வதில்லை. அது இறைவனாலும் இயற்கையாலும் கொடுத்த வரங்களாகவேதான் அமைகின்றது. அந்த வகையில்தான் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களை தெரிவு செய்தது இயற்கையும் இறைவனும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அடிமைகள் போன்று நடாத்த முற்பட்டார்கள் இதனால்தான் 61 வருடங்களுக்கு முன் எமக்கு விடுதலை வேண்டி அறவழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது 31 வருடங்களுக்கு பின் தந்தை செல்வாவின் ஆலோசனைக்கிணங்க ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்று 30 வருடங்களாக ஆயுதமேந்தியும் போராடி கடந்த 2009 மே 18 ஆம் திகதியுடன் அந்த ஆயுத போராட்டமும் மௌனிக்கப்பட்டு இன்னும் விடுதலை இன்றி இருக்கின்றோம்.
இந்த நிலையில்தான் எமது அரசியல் பலம் அவசியமாகின்றது அத்துடன் வடக்கு கிழக்கை அரசு பிரித்தாலும் இதே போன்ற அமைப்புகள் வடகிழக்கை இணைத்தால்போல் செயற்படுவது மக்கள் மனங்களில் இன்னும் எமது உன்றிணைந்த தமிழ் தேசிய உணர்வு இருப்பதை உணர்த்துகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» வடக்கு மக்களின் வாழ்க்கையை இருளாக்க முயற்சித்த சக்திகள் தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றன : பெசில் குற்றச்சாட்டு
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி
» வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum