அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி

Go down

புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி  Empty புதுக்குடியிருப்பு மக்களுக்கு “வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு’ திட்டத்தின் கீழ் நிதியுதவி

Post by kaavalan Sun Feb 27, 2011 4:22 am

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மீள்குடியமர்த்தப்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு இன்றைய தினம் வீடுகளை அமைப்பதற்காக முதல் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், குடும்பம் ஒன்றிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வீதம் இந்த முதல்கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இன்றைய தினம் சுமார் 671 குடும்பங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விஸ்வமடு மாகாவித்தியலயம், மற்றும் பாரதிபுரம் மாகாவித்தியாலயத்திலும் இந்த கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளன.

இந்த நிதியுதவியினை கொண்டு விரைவாக தமது வீடுகளை கட்டி முடிக்குமாறு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, அந்த மாவட்டத்தின் மூன்று பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் குடியமர்த்தப்படுவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்திரனம், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
» புதிய தளபதியின் கீழ் பலம்பெறும் இலங்கை விமானப்படை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum