அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்

Go down

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்  Empty ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்

Post by MayA Wed Mar 23, 2011 5:21 pm

தன்னையே மோதி விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைச்சரொருவரின் வாகனம் பயணித்தது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார்.
பிரஸ்தாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புப் பரிவார வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றிய நிலையில் தானே வாகனமொன்றை ஓட்டிக் கொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்துள்ளார்.

அதன் போது அமைச்சரொருவரின் வாகனமொன்றும் அதனுடன் பயணித்த பாதுகாப்பு வாகனங்களும் ஜனாதிபதியின் வாகனத்தை முட்டித்தள்ளும் வகையில் அநாயாச வேகத்தில் பயணித்துள்ளன. ஆயினும் ஜனாதிபதியின் சாதுரியமான வாகனமோட்டல் காரணமாக விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆயினும் பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர் நெவிலிடம் "பார்.. இவன் என்னையே முட்டித் தள்ளிவிட்டு போகின்றான்" என்றவாறு கடுமையான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதனை பரீட்சித்துப் பார்க்கும் வகையிலேயே அவர் இன்று பாராளுமன்றப் பாதையில் தனியாகப் பயணித்துள்ளதுடன், அந்த அனுபவத்தை நேரடியாகவும் பெற்றுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சா் ஜோன் செனவிரத்தினவின் வாகனம் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி
» இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு
» செல்வம் அடைக்கலநாதன் பா.உ. பயணித்த வாகனம் தலைமன்னாரில் விபத்து
» நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum