அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு

Go down

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு Empty நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு

Post by theepan Tue Mar 08, 2011 2:29 am

சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு Tna_Trinco1

இலங்கை நேரம் 6 மணியளவில்; இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

பதிலுக்கு அவரது மெய்பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் சென்றவர்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.

எனினும் அவர்கள் அச்சம் காரணமாக தற்போது பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பதாகவும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எஸ். சுமந்திரன் உள்ளிட்டோர் இது குறித்து; பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அரசாங்க புலனாய்வுப் பிரிவினரால் கிளைமோர் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு நேற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum