அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸை தோற்கடிக்க தேர்தல் பிரசாரக் களத்தில் குதிப்போம் - சீமான்

Go down

ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸை தோற்கடிக்க தேர்தல் பிரசாரக் களத்தில் குதிப்போம் - சீமான்  Empty ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸை தோற்கடிக்க தேர்தல் பிரசாரக் களத்தில் குதிப்போம் - சீமான்

Post by Admin Fri Mar 25, 2011 4:31 pm

ஈழத்தமிழ் மக்களைக் கொன்றழித்த இந்திய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தமிழகத் தேர்தலில் போட்டியிடும் 63தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு தோற்கடித்து அக்கட்சியை தமிழ் நாட்டில் இல்லாது ஒழிப்பதே நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ தலைமையிலான ம.தி.மு.க. வெளியேறி தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிபெடுத்தது. இம்முடிபின்படி தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பிரசாரம் மேற்கொள்வது என நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை நேற்று ஊடகவியலாளர்களுக்கு வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டால் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க. அணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகப் போய்விடும். எனவே இத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று முடிபு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனிப்பெரும் சக்தியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.எனவே காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் எதிர்ப் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று முன்தினம் இம்முடிவை எடுத்துள்ளது.

இத் தேர்தலைப் பொறுத்தவரை எங்களுக்கு இரட்டை இலை, முரசு ,கதிர், சுத்தியல், அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸ் கட்சியை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித் தண்ணீருக்கும் முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ். எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக்கூடாது.

இனிவரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் முடிபை எடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நோக்கம்.

அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால் அப்போது அவரையும் எதிர்த்து போராட்டங்களை நடத்துவோம். ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை.ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு.

வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும் யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

இத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிபு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விடயங்களையும் யோசித்துத் தான் முடிபை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அ.தி.மு.க நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.அருமை அண்ணன் வைகோ எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

ஈழத்தமிழ் மக்களைக் கொன்றழித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள் என்பதே இந்தக் தேர்தலில் எனது ஒரே பிரசாரம்.

இத் தேர்தலில் ஈழத் தமிழினத்திற்கு காங்கிரஸ் கட்சி இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரசாரத்தில் சொல்லப்போகின்றேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப்போகும் நல்ல விஷயங்கள் திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துக் கூறுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» தமிழகத்தில் தமிழீழத் திருத்தாயின் திருவுருவத்திற்கு வீரவணக்கம் - சீமான்
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum