இலங்கை செல்லும் பிளேக், ஒபாமாவின் காத்திரமான செய்தியை மஹிந்தாவிற்கு கொண்டுவரலாம்!- கொழும்பு வார ஏடு
Page 1 of 1

கடந்த திங்கட்கிழமை (28.03.2011) அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் உலகத் தமிழர் பேரவைக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் போர் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக உலகத் தமிழர் பேரவைக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை கூறலாம். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக், உலகத் தமிழர் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்தித்திருந்தார்.
75 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் உலகத்தமிழர் பேரவை சார்பில் அதன் தலைவர் வண. பிதா சீ.யோ. இம்மானுவெல் அடிகளார், அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை தலைவர் எலியஸ் ஜெயராசா, திருமதி கிறேஸ் புஸ்பராணி வில்லியம்ஸ் மற்றும் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், போருக்கு பின்னரான நிலை போன்றன தொடர்பில் ஆராயப்பட்டதாக உலகத்தமிழர் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ் கட்சிகளுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பேச்சுக்கள் தொடர்பிலும் அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. எனினும் போர் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்திவருவது, அதனால் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
போரின் போதும், அதன் பின்னரும் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் உலகத்தமிழர் பேரவை பிளேக்கிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர், சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிளேக் சில விடயங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒபாமா அரசின் மிகவும் காத்திரமான செய்தியை மகிந்தாவிற்கு பிளேக் கொண்டுவரலாம். இந்த மாதம் சிறீலங்கா செல்வதாகவும் பிளேக் தெரிவித்துள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் நடைபெற்ற ஆசிய அமைப்பினரின் கூட்டத்தில் பேசிய பிளேக் சிறீலங்கா தொடர்பில் கடும் தொனியில் பேசியிருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum