அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம்

Go down

அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம் Empty அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம்

Post by kaavalan Mon Apr 04, 2011 1:05 pm

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில் சாவடைந்துள்ளார் என்பதனை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
“வெள்ளைத் தமிழச்சி” என தமிழ் மக்களால் போற்றப்பட்ட அடேல் பாலசிங்கம் அவர்களின் அன்னையார், தமிழீழ மக்களின் வாழ்வியல் பற்றிய உரிமையில் அதிக கவனமும், தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய ஆழத்தை அறியும் தேடலும் ஒருங்கே கொண்டவர்.

தமிழர்களால் முன்னெடுக்கப்படும் தேசியப் பணிகளில் ஆர்வத்துடன் இணைந்துகொள்ளும் இவர், மெல்பேணில் நடைபெறும் தமிழர் தேசிய நிகழ்வுகளில் பங்குகொள்வதிலும் தவறியதில்லை.

பெற்றி அம்மையாரின் இழப்பால் துயருறும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாவடைந்த அன்னையாரின் இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான Warragul எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 07 – 04 – 2011 அன்று நடைபெறவுள்ளது.

இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் இடம்

Victoria Chapel
Cnr of Victoria & Albert Street
Warragul VIC 3820

இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் நேரம்

எதிர்வரும் 07 – 04 – 2011 வியாழக்கிழமை காலை 11 மணி

வணக்கமலர்கள் அனுப்பவேண்டிய முகவரி

20 Bowen Street,
Warragul VIC 3820

வணக்க மலர்களை தமிழ் அமைப்புக்கள் ரீதியாக மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இறுதிவணக்கநிகழ்வுக்குச் செல்லவிரும்புபவர்கள் வாகன வசதி தேவைப்படுமாயின் மெல்பேண் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம் Betty_01அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம் Betty_02அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம் Betty_03அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம் Betty_04
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum