தமிழ் தேசத்தாய் பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அழைப்பு - த.தே. கூட்டமைப்பு
Page 1 of 1

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ்த்தேச தாயுமான அமரர் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசர் உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை இன்று மாலை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்ட்டடிருப்பதாவது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அமரத்துவம் அடைந்தையிட்டு இலங்கையில் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மூன்று தசாப்தமாக தமிழ் தேசிய உணர்வுக்கு உயிர் கொடுத்துச் செயற்பட்ட உன்னத தலைவனை கருவறையில் சுமந்து இந்த மண்ணுக்கு அர்ப்பணித்த பெருமைக்குரியவர் அன்னை பார்வதியம்மாள்.
மிக நேர்த்தியான நேர்மையான அரச உத்தியோகத்தரான அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக அவர் அமரத்துவம் அடையும் வரை வாழ்ந்தவர்.
நான்கு பிள்ளைகளுக்கு தாயான இவர் அவர்களை நெறிப்படுத்துவதிலும் வழிநடத்துவதிலும் சிறப்பாக செயலாற்றியவர்.
பிரபாகரன் அவர்களின் ஆத்மார்த்தமான அணுகு முறைகளுக்கு ஆதாரமாக விளங்கியவர் பார்வதி அம்மாளே.
அன்னாரது மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ( தமிழ் தேசிய கூட்டமைப்பு ) தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவுப்பதுடன் சிரம் தாழ்த்திய அஞ்சலியையும் செலுத்துகிறது.
அன்னாரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
» தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் இறுதி அஞ்சலி எமக்குச் சொல்லும் செய்தி என்ன?
» பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு
» அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம்
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum