அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராஜஸ்தானை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்: முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்

Go down

ராஜஸ்தானை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்: முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல் Empty ராஜஸ்தானை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்: முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்

Post by prasath Sat Apr 09, 2011 7:01 pm

ராஜஸ்தானை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்: முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல் 9_003ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009) அணிகள் மோதுகின்றன.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க இரு அணி வீரர்களும் காத்திருக்கின்றனர்.

நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி-20" கிரிக்கட் தொடர், நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. ஐதராபாத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் இலங்கையின் சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் வழி நடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க சென்றுள்ள ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் முதல் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. காயம் காரணமாக கோலிங்வுட் வெளியேறியது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவான விஷயம். இருப்பினும் இந்தியாவின் ராகுல் டிராவிட், சித்தார்த் திரிவேதி, அஜின்கியா ரகானே, பினல் ஷா, அஸ்னோத்கர், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சில் பலம் சேர்க்க நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், அவுஸ்திரேலியாவின் ஷேன் டெய்ட் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பங்கஜ் சிங், ரகானே, ஆகாஷ் சோப்ரா, ஸ்டீவர்ட் பின்னி உள்ளிட்ட இளம் இந்திய பவுலர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.

சுழலில் கப்டன் ஷேன் வார்ன் இருப்பது பலம். இவருடன் தென் ஆப்ரிக்காவின் ஜோகன் போத்தா இணைய இருப்பது சுழலின் பலத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

கில்கிறிஸ்ட் இல்லாத நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கப்டன் சங்ககரா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் அசத்திய இவர், இம்முறை டெக்கான் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வெளியேறியது பின்னடைவான விஷயம். இருப்பினும் தென் ஆப்ரிக்காவின் டுமினி, அவுஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் உள்ளிட்டோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழிய வேண்டும். இவர்களை தவிர இந்தியாவின் ஷிகர் தவான், இங்கிலாந்தின் மைக்கேல் லம்ப் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடந்த தொடர்களில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, பெரிய அளவில் சோபிக்கவில்லை. இம்முறை டெக்கான் அணியில் இடம் பெற்றுள்ள இவர், முழுதிறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்.

தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் இடம் பெற்றிருப்பது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மன்பிரித் கோனி, ஹர்மீத் சிங் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுழலில் சாதிக்க இந்தியாவின் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, தென் ஆப்ரிக்காவின் டுமினி உள்ளிட்டோர் உள்ளனர்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி: குமார சங்ககரா (கப்டன்), காமிரான் ஒயிட், டேனியல் கிறிஸ்டியன், பீட்டர்சன், பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, டுமினி, சிகர் தவான், மன்பிரீத் கோனி, கிறிஸ் லைன், மைக்கேல் லம்ப், சிகர் தவான், அர்ஜுன் யாதவ், ரவி தேஜா, இஷாங்க் ஜாகி, பரத் சிப்லி, சன்னி சோகல், ஜய்தேவ் ஷா, ஆஷிஸ் ரெட்டி, தேவ்தார், டேல் ஸ்டைன், ஹர்மீட் சிங், தியரான், மல்கோத்ரா, அங்கிட் சர்மா, ஆனந்த் ராஜன், ஆகாஷ் பண்டாரி.

பயிற்சியாளர்: டேரன் லேமன் (அவுஸ்திரேலியா).

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: ஷேன் வார்ன் (கப்டன்), வாட்சன், ரோஸ் டெய்லர், போத்தா, டிராவிட், ஷான் டெய்ட், கோலிங்வுட், பங்கஜ் சிங், லம்ப், வார்ன், ரகானே, ஆகாஷ் சோப்ரா, அசோக் மேனரியா, பைஜ் பசல், அஸ்னாத்கர், சாலுங்கே, அமித் பவுனிகர், ஸ்டூவர்ட் பின்னி, சுமித் நார்வல், அங்கீட் சவான், பினல் ஷா, திசந்த் ஹரேந்திரா, அபிஷேக் ராத், சித்தார்த் திரிவேதி, பங்கஜ் சிங், நயன் தோஷி, அமித் சிங், ஆதித்யா டோல், சமத் பல்லா, தீபக் சகார்.

பயிற்சியாளர்: ஷேன் வார்ன் (அவுஸ்திரேலியா).

ஐ.பி.எல். அரங்கில் டெக்கான் சார்ஜர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஏழாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஆறு போட்டிகளில், ராஸ்தான் 5 டெக்கான் ஒரு வெற்றி கண்டன.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக கிண்ணம் : இன்று இலங்கை அணியுடன் கனடா மோதல்
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் வலுக்கின்றது
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக இன்று ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum