அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்

Go down

மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில் Empty மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்

Post by Admin Mon Dec 27, 2010 4:57 am

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 04 பயணிகளை மன்னார் அரச பேருந்து சேவையின் நடத்துனரும், சாரதியும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26-12-10) அதிகாலை முதல் நடுவீதியில் நிற்க வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 04 பயணிகள் கொழும்பு, அனுராதபுரம், கெக்கிராவ ஆகிய இடங்களுக்குச்சென்று விட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று (25-12) இரவு10-30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனா்.

பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர். இதன்போது கொழும்பில் இருந்து நேற்று (25-12) இரவு 8-30மணிக்கு புறப்பட்ட மன்னார் அரச போக்குவரத்துச்சேவைக்குச் சொந்தமான (NA-3628) எனும் இலக்கம் கொண்ட பஸ் ஒன்று இன்று (26-12) அதிகாலை 3-30 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.

பின் குறித்த பேருந்தானது தலைமன்னார் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு வருவது வழமை. இந்த நிலையில் குறித்த 04 பயணிகளும் பஸ்சில் ஏற பஸ் நடத்துனர் பயணிகளிடம் எந்த பஸ்ஸில் வந்தீர்கள்? என்று கேட்க தனியார் பஸ்சில் வந்தோம் என்று கூறியுள்ளனர். உடன் நடத்துனர் தனியார் பஸ்சில் வந்தவர்களை நாங்கள் ஏற்ற முடியாது. ஏற்ற வேண்டாம் என்று அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறி உடனடியாக பஸ்சில் இருந்து இறங்குமாறு நடத்துனர் குறித்த 04 பேரிடமும் தெரிவித்துள்ளார்.

இறங்க மறுத்த சமயம் டிக்கட் புத்தகத்தினால் தாக்கி 04 பயணிகளையும் பலவந்தமாக இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் 4 பேரும் பஸ் தரிப்பிடத்தில் நின்று விட்டு விடியற் காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

மன்னார் தனியார் பேருந்திற்கும்-அரச பேருந்திற்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் தொடர்ந்தும் இடம் பெற்று வரும் மோதல்களினால் தற்போது பயணிகள் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில் Mannar_10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் வலுக்கின்றது
» ரணிலிலுக்கும் சஜித்துக்கும் இடையில் சமரச முயற்சி
» கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்?
» வெடிகுண்டு அச்சத்தில் ஸ்ரீ லங்கன் விமானப் பயணிகள் இறக்கப்பட்டு சோதனை
» மரணப் பொறியாக மாறியுள்ள ஏ 9 வீதி! ஆங்காங்கே சிவப்பு கொடிகளால் எச்சரிக்கை! - பயணிகள் விசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum