ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் வலுக்கின்றது
Page 1 of 1

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் கடுமையாக வலுத்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக இன்றைய லக்பிம சிங்கள வார இதழுக்கு ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் அளித்துள்ள பேட்டியில் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
யுத்தத்தை வழிநடாத்துவது தவிர அரசாங்கத்துக்கு வேறெந்த விடயத்திலும் தெளிவான கொள்கையோ செயற்திட்டமோ இல்லை என்று அவர் பிரஸ்தாப பேட்டியில் நேரடியாகவே அரசாங்கத்தைக் குறை கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தை பாராட்டும் வகையில் கருத்துத் தெரிவித்து வந்த ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரே இவ்வாறு விமர்சிப்பதாயின், இரு கட்சிகளுக்குமிடையிலான முரண்பாட்டின் தீவிரத்துக்கு அதனை விட வேறு ஆதாரம் தேவையில்லை.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தோ்தல் மற்றும் பொதுத் தோ்தல்களின் போது ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்களே அரசாங்கத்தின் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னின்றார்கள். ஆயினும் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தல்களின் போது அரசாங்கத்துடன் இருந்து கொண்டே விமர்சிக்கின்றார்கள்.
அது மாத்திரமன்றி அண்மையில் கூட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டளஸ் அலஹப்பெரும, மைத்திரிபால சிரிசேன, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னிலையில் இந்த அரசாங்கம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க மாட்டாது என்ற வகையில் இதே ரத்ன தேரர் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Similar topics
» சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பான கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வலுக்கின்றது
» பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
» உலக கிண்ணம் : இன்று இலங்கை அணியுடன் கனடா மோதல்
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» ராஜஸ்தானை சமாளிக்குமா டெக்கான் சார்ஜர்ஸ்: முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum