முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் முரளிதரன் கோள்மூட்டு
Page 1 of 1

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் முரளிதரன் கோள்மூட்டியுள்ளதாக அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதே காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கப்பூர் சென்று அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நகல் யோசனைகளைத் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றதாகவும் அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.
சிங்கப்பூரில் நடைபெற்ற பிரஸ்தாப சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் கலந்து கொண்டதாக பிரதியமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
ஜனாதிபதி அது குறித்து கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் நேரடியாகவே வினாத்தொடுத்திருந்தார்.
அதனை வன்மையாக மறுத்த முதலமைச்சர் சந்திரகாந்தன் தான் மாலைதீவுக்கு மட்டுமே சென்றிருந்ததாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையோ வேறு தரப்பினரையோ சந்திக்கச் செல்லவில்லை என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன் "இவ்வாறான கோள்மூட்டும் வேலைலைய பிரதியமைச்சர் முரளிதரன் தான் மேற்கொண்டிருப்பார். நான் முன்பு சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் அவர் (பிரதியமைச்சர் முரளிதரன்) நான் கே.பி.யை சந்திக்கச் செல்வதாகவும் உங்களிடம் கோள் மூட்டியவர் தானே" என்று காட்டமாவே பதிலளித்துள்ளார்.
அது கேட்டு சிரித்த ஜனாதிபதி, "இதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள், வாக்குச் சண்டைக்காக இவ்வாறு நடப்பது சகஜம்" என்று முதலமைச்சரைத் தேற்றியுள்ளார்.

Similar topics
» கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் - பிரதியமைச்சர் முரளிதரன் இடையே மீண்டும் மோதல்கள்
» 20,000 ற்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளேன் - பிரதியமைச்சர் முரளிதரன்
» அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்
» வடமாகாண மக்கள் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணமாக யாழ் நூலகம்: கிழக்கு முதலமைச்சர்
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum