அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்

Go down

யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர் Empty யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்

Post by Admin Mon Oct 25, 2010 7:28 am

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் என சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் காயமடைந்தோர், அங்கவீனர்கள் சொத்துக்ளை இழந்த அரச ஊழியர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

1948 ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். அதன்பின்னர் தேசவழமைச் சட்டம் காரணமாக தழிழரும் சிங்களவரும் இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழர்களுக்கு தனி அரசியல் அபிலாசைகள் உண்டு. அதனை நாம் கட்டாயம் கௌரவிப்போம்.

யுத்த சூழ்நிலையில் கதிர்காமம் கோயிலுக்கு தமிழர்கள் வந்தனர். அப்போது நான் அங்கு முதலமைச்சராகவிருந்தேன். அப்போது தமிழ் மக்களுக்கு உதவிசெய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

எனக்கு தழிழ் மக்களின் உணவு கலாச்சாரம் எல்லாமே பிடிக்கும். தமிழர்களும் சிஙகளவர்களும் கலாச்சாரம் உணவு பண்பாடு என எல்லாவற்றிலும் ஒன்றாகவே உள்ளனர். மொழி மாத்திரம் தான் இருவரையும் பிரிக்கின்றது.

இலங்கை அனைத்து மக்களுக்கும் சொந்தமான இடம். இங்குள்ள மக்கள் அனைவரும் எங்கும் சுதந்திரமாக வாழ முடியும். அதை யாரும் மறுக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒன்றாக வாழவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum