நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இந்திய ஆதரவைப் பெற உயர்மட்டத்தூதுக்குழு
Page 1 of 1

நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மை நிலவரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளித்து, அதன் மூலம் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தூதுக்குழுவில் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் உள்ளடக்கப்படவுள்ளனர். தூதுக்குழுவின் தலைமைப் பொறுப்பு பெரும்பாலும் வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படலாம்.
இந்திய ஆதரவைக் கோருவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இந்தியாவுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்கள் நேரடியாகப் பிரயோகிக்கப்படுவதை தடுத்துக் கொள்வது அவரது நோக்கமாக இருக்கின்றது.
அதற்குப் பதிலாக எதிர்வரும் ஜுலையில் நடைபெறவுள்ள சர்வதேச மகாநாடு ஒன்றின் போது ரஷ்யா மற்றும் சீனத்தலைவர்களை நேரடியாகச் சந்தித்து நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்ககைக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை ஜனாதிபதி நேரடியாக மேற்கொள்ளவுள்ளார்.

Similar topics
» நிபுணர்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கை
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum