அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு பரவாமலிருக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தள பாவனையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கரிசனை

Go down

அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு பரவாமலிருக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தள பாவனையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கரிசனை Empty அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு பரவாமலிருக்க பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தள பாவனையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கரிசனை

Post by MayA Thu Feb 24, 2011 5:26 am

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் எதிர்ப்புணர்வு பரவாமலிருப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இணையத்தள பாவனையை மட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் உலக நாடுகள் பலவற்றில் நடைபெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள் என்பன இணையத்தள பாவனையாளர்கள் மூலமாகவே பரவலான பிரச்சாரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, ஆதரவுத் தளம் பரவலாக்கப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது கூட இலங்கையில் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டிருக்கின்றமை மற்றும் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள், விலைவாசி உயர்வு என்பன தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சிக்கும் கருத்துக்கள் இணையத்தள பாவனையாளர்களால் பரப்பப்பட்டு வருகின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அது தற்போதைக்கு ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது.

ஆயினும் அதுவே எதிர்காலத்தில் தீவிரமடைந்து அரசாங்கத்துக்கு எதிரான தீவிர எதிர்ப்புணர்வுக்கு வழி வகுத்து விடும் என்பதால் அரசாங்கம் அதனை முளையிலேயே கிள்ளியெறிய முற்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செய்தித் தளங்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதன் முதற்கட்டமாக தனது ஆதரவாளர்களைக் கொண்டு தற்போதைக்கு பேஸ்புக் இணையத்தளத்துக்கு எதிரான பல முறைப்பாடுகளை அரசாங்கமே பதிவு செய்துள்ளது. அதனை வைத்து தேவைப்படும் பட்சத்தில் அந்த சமூக வலைப்பின்னலை இலங்கையில் தடை செய்து விடலாம் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கத்துக்கெதிரான இணையத்தளங்களை முடக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக வெளிநாடொன்றின் உதவியும் பெறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum