அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

1 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி: யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்

Go down

1 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி: யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் Empty 1 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி: யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்

Post by Admin Wed Dec 29, 2010 7:10 am

வடக்கு கிழக்கு வீதி அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ள பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக மோசடி செய்யப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடக்கு கிழக்கு பிரதேச பிரதான வீதிகளை நிர்மாணிக்கும் போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் ஒரு கிலோமீற்றருக்கு ஒரு கோடியே ஐந்து லட்சம் அமெரிக்க டொலர் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வேலைத்திட்டத்தின் போது ஒரு கிலோமீற்றர் வீதியை நிர்மாணிப்பதற்காக இரண்டு கோடியே 75 லட்சம் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், வீதிகளை அமைக்கும் உப ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள சீன நிறுவனங்களுக்கு பெருந்தெருக்கள் அமைச்சு ஒரு கிலோமீற்றருக்கு 86 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

இதன்மூலம் பெருந்தொகையான பணத்தை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் மோசடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டும் பெருந்தெருக்கள் அமைச்சின் தகவல்கள், இந்த மோசடி காரணமாக வீதிகளை நிர்மாணிக்கும் சீன நிறுவனம் தரமான முறையில் வீதிகளை நிர்மாணிப்பதில்லை எனத் பெருந்தெருக்கள் அமைச்சின் சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தங்களுக்கான சகல ஆவணங்களும் பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் உள்ளபோது இது ஒரு கூட்டு குடும்ப ஊழலாகவே இருக்குமென்றும் . சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் சகல கொடுக்கல், வாங்கல்களும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுவது சிக்கலுக்குரியது எனவும் யார் அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் எனவும் அவ் சிரேஷ்ட பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் - அமெரிக்க செனட் யோசனை நிறைவேற்றம்
» ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!
» அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum