அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது

Go down

யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது  Empty யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது

Post by VeNgAi Mon May 02, 2011 4:29 pm

யாழ். அனலைதீவில் வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருத்தியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தில் வசித்து வந்த முருகையா நிஷாலினி எனும் 24 வயதுடைய யுவதியொருத்தியே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள யுவதி தன் தாயாருடன் குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுவிட்டு, தாயாருக்கு முன்பே குளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதன் பின் சற்று நேரம் கழித்து தாயார் வீடு திரும்பிய போது மகள் சடலமாக தூக்கில் தொங்குவதைக் கண்டுள்ளார்.

அதனையடுத்து கிராமசேவகர் ஊடாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த நீதவான் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

பிரஸ்தாப யுவதியின் காதலன் என்று அறியப்பட்டவர் கடல்மார்க்கமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் யுவதியின் மரணத்துக்கும் தொடர்புகள் இருக்கின்றதா என்பது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum