அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

Go down

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா  Empty டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

Post by priyanka Tue May 03, 2011 1:19 pm

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க இராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.
பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.



அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.



பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.


இஸ்லாமிய முறைப்படி உடல் அடக்கம் நடந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கவில்லை.

உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடலாம் என்பதால் அதைத் தவிர்க்கவே கடலில் உடலை வீசியதாக தெரிகிறது.

டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா  Osama_Bin_Laden2
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் 15வருடங்களுக்குப் பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
» இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு வகிக்கின்றது: அமெரிக்கா
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு இலங்கையிலும் தலையிட அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது: சம்பிக்க ரணவக்க
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum