அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!

Go down

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!  Empty ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!

Post by VeNgAi Thu May 05, 2011 3:12 pm

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெற்றுவரும் நிலையில், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களே தாயக உறவுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கமுடியும்.
சிறிலங்கா அரசினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட போர்குற்றங்கள் - இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள் - இராணுவ தலைவர்கள் மீது அனைத்துலக விசாரணைக்க உத்தரவிட கோரியும் ஐநா நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அனைத்துலக பொறிமுறையை உருவாக்க கோரியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கடமையாகின்றது.

அந்தவகையில் தமிழர்கள் பரந்து வாழுகின்ற உலக நாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையொப்ப போராட்டம் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தினால் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை அமைப்புக்கள் இணைந்துள்ளன.

இதேவேளை தமிழக நடிகர் டெல்லி கணேஸ் அவர்கள் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை சுவிஸ் பேர்ண் நகரில் தொடங்கி வைத்துள்ளார்.

புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் அரசியல் பீடமாக விளங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் இந்த கையெழுத்து போராட்ட ஆவணம் தாயகம் தேசியம் தன்னாட்சி எனும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் சனநாயகரீதியாக பிரதிபலித்து நிற்கும்.

இக்கையெழுத்துப் போராட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : warcrime@tgte,org
pmo@tgte,org

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!  Petion_af1ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!  Petitionlஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!  DSC03819ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!  Sri%20lanka
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum