அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?

Go down

 ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை? Empty ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?

Post by MayA Sat Dec 18, 2010 11:21 am

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வோரில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருக்கின்றார்களா என பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மேற்குலக நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வோரில் புலி ஆதரவு வெளிநாட்டவர்கள் இருக்கின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தையும் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வலுப்படுத்தவும் இவ்வாறு புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தால் அவர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் கைது செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum