அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு

Go down

இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு Empty இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு

Post by priyanka Sun Dec 19, 2010 2:16 am

இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளை படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பரப்புரையே அது என்று அவர்கள் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/12/2010

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என இந்திய புலனாய்வுத் துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள இக்காலப் பகுதியில் எமது போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் பொய்ப் பரப்புரையின் ஒருபகுதியாகவே இச்செய்தியை நாம் பார்க்கின்றோம்.

கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் நாளன்று ஆயுதங்களை மெளனிப்பதாக நாம் வெளிப்படையாக அறிவித்திருந்தோம்.

ஜனநாயக வழியிலான மக்கள் எழுச்சியின் பலனாக எமது போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் - இராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.

இத்தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணைபோகாமலும் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமலும் இருக்க வேண்டுமென்று இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையும் மக்களையும் அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்?
» இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?
» இந்திய சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்க முனைந்த கோத்தாபயவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» பிரபல சிங்கள நடிகை படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum