அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

Go down

பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம் Empty பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

Post by theepan Sat Feb 19, 2011 3:14 pm

மன்னார், மதவாச்சி பிரதான வீதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தையடுத்து அங்கு வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இம்முறுகல் நிலையைத் தணிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பொதுமக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து தென்பகுதியை நோக்கி சிவில் உடை தரித்த பொலிஸாரை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பயணித்தது.
அப்போது முருங்கன் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இந்த பஸ்ஸுடன் நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கில் அந்த இடத்தில் கூடி பஸ்ஸில் வந்த பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் உள்ள இராணுவ காவலரணில் உள்ள இராணுவத்தினர் வந்து இந்த முறுகல் நிலையைத் தணிக்க முற்பட்டனர். பொதுமக்கள் அதற்கு கட்டுப்படாமல் போனதால் இராணுவத்தினர் நிலத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து அகன்றனர். சடலங்கள் இரண்டும் முருங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டன.
பஸ் சாரதி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது
» மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
» யாழ்.மாநகரசபையின் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் மூவர் படுகாயம்
» வன்னி இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை! என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
» வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸுக்கு அனுராதபுரத்தில் கல்லெறி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum