அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை

Go down

ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை Empty ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:04 am

ஐ.தே. க. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் புதிய இடசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின ஆகியோருக்கெதிராக பொலிசில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களுடன் ஒத்துழைத்தமை, ஆதரவு வழங்கியமை என்பன அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.

ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் போதான ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதற்கும் அவர்கள் இருவரின் தூண்டுதலே பிரதான காரணம் என்பதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் இருவரையும் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய முன்னணி (சிறீ லங்கா ஜாதிக பெரமுன) கட்சியின் தலைவர் விமல் கீகனகே மற்றும் சில சட்டத்தரணிகளும் சோ்ந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum